விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக.30) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அ. சிவஞானம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக. 30) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிர்வாக காரணங்களால் அன்றைய தினம் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட் டுள்ளது. எனவே, இக்கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.