விருதுநகர்

விருதுநகரில் பிறந்த குழந்தை உயிரிழப்பு: அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

29th Aug 2019 09:11 AM

ADVERTISEMENT

விருதுநகரில் புதன்கிழமை பிறந்த குழந்தை இறந்ததைத் தொடர்ந்து உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
 விருதுநகர் பட்டு தெருவைச் சேர்ந்தவர் தாவித்ராஜா- காயத்ரி தம்பதியினர். இந்நிலையில் கர்ப்பிணியான காய்த்ரி (23) விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே உள்ள பெ.சி. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலை யில், இந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக காயத்ரி புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, காலை 11 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தையின் நிலைமை மோசமாக இருந்ததால், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந் தது. 
பெ.சி. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மற்றும் செவிலியர்கள் முறையாக பிரசவம் மற்றும் சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழந்து விட்டதாக காயத்ரியின் உறவினர்கள் அந்த மருத்துவனையை முற்றுகையிட்டனர். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT