ராஜபாளையத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, இ-கிளப் தலைவர் ஈஸ்வர ராஜா தொடக்கி வைத்தார். தமிழ்நாடு தொழில்முனைவோர் கழக அலுவலர் ரவிக்குமார், தொழிலாளர் ஆய்வாளர் மோகன்ராஜா ஆகியோர், தொழில் தொடங்குவோருக்கு வங்கி மற்றும் அரசின் சலுகைகள் குறித்து விளக்கினர்.
பயிற்சியாளர்கள் ராஜ்குமார், முத்துக்குமார் ஆகியோர் தொழில்முனைவோருக்கான ஆலோசனை மற்றும் இடர்பாடுகளை எதிர் கொள்ளும் விதம் குறித்து எடுத்துக்கூறினர்.
இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 135 பயனாளிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் செய்திருந்தார்.