சிவகாசி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து, மின்வாரிய தற்காலிக ஊழியர் உயிரிழந்தார்.
சிவகாசி அருகே நாரணாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி மகன்அருண்குமார் (23). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் நகரில் உள்ள ஒரு மின்மாற்றியில் பழுதுநீக்குவதற்கு , மின் இணைப்பை துண்டிக்காமல் மேலே சென்ற போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.