விருதுநகர்

சாத்தூர் அருகே தண்டவாளத்தில் செவிலியர் சடலம் மீட்பு

18th Aug 2019 12:56 AM

ADVERTISEMENT


சாத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் செவிலியர் சடலத்தை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை கைப்பற்றினர். 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னஓடைப்பட்டியை சேர்ந்தவர் சண்முகையா. இவருடைய மகள் முனீஸ்வரி (24). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார். 
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு வந்த முனீஸ்வரி சனிக்கிழமை பணிக்குச் செல்லவில்லையாம். 
இந்நிலையில், சனிக்கிழமை காலை சின்னஓடைப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அவரது சடலம் கிடந்தது கிராமத்தினருக்குத் தெரியவந்தது. 
இத்தகவலறிந்து வந்த  ரயில்வே போலீஸார் முனீஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
முனீஸ்வரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து ரயில்வே வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT