விருதுநகர்

கார் மோதி தொழிலாளி பலி

18th Aug 2019 12:56 AM

ADVERTISEMENT

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை கார் மோதி தொழிலாளி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் பிரண்டைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியான்டி (60). இவர் மானாமதுரை அருகே வாகுடி என்ற இடத்தில் உள்ள கரிமூட்டம் போடும் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 
இந்நிலையில் அருகேயுள்ள முத்தனேந்தலுக்கு கடைக்குச் சென்ற முனியான்டி மீது ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் முனியான்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT