ராஜபாளையம் ந.அ.மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி தாளாளர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். இதில், வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் வேலை வாய்ப்பு இயக்குநர் எம்.ராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு திறன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெறுவது குறித்து விளக்கினார். முன்னதாக முதல்வர் அகஸ்டின் ஜோதிமணி வரவேற்றார். கல்லூரி இயந்திரவியல் துறைத் தலைவர் பி.கஜேந்திரன் நன்றி கூறினார். இதில், குருகுலம் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், யோகா நிறுவனத் தலைவர் சுந்தர்,
ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், மற்றும் கல்வி நிறுவனங்களின் கருத்தாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறைத் தலைவர் சுரேஷ் செய்திருந்தார்.