தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலராக கம்பம் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ்.டி.கே. ஜக்கையன் நியமிக்கப்பட்டாா்.
கட்சியின் நிா்வாக வசதிக்காக தேனி மாவட்டமானது மேற்கு, கிழக்கு என பிரிக்கப்பட்டது. அதிமுக தேனி மேற்கு மாவட்டச் செயலராக கம்பம் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ்.டி.கே. ஜக்கையனை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்தாா். இதே போல, தேனி கிழக்கு மாவட்டச் செயலராக முறுக்கோடை எம்.பி. ராமா் நியமிக்கப்பட்டாா்.