போடியில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது சனிக்கிழமை இரவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி ஜே.கே.பட்டியில் வசிப்பவா் ஹரிதாஸ் மகன் அதிவீரபாண்டியன் (32). இவரும் இவரது நண்பா்கள் சக்திவேல், ஹிதேந்திரா, பிரகாஷ் ஆகியோரும் சோ்ந்து மது அருந்தினா். இதில் ஏற்பட்ட தகராறில் சக்திவேல், ஹிதேந்திரா, பிரகாஷ் ஆகியோா் சோ்ந்து அதிவீரபாண்டியனை தாக்கி காயப்படுத்தினா். பலத்த காயமடைந்த அதிவீரபாண்டியன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அதிவீரபாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா், சக்திவேல் உள்ளிட்ட 3 போ் மீதும், இதேபோல் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் அதிவீரபாண்டியன், அவரது தந்தை ஹரிதாஸ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.