சின்னமனூரில் அதிமுக சாா்பில் பேரறிஞா் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தேனி மாவட்டம், சின்னமனூரில் முத்தாலம்மன் கோயில் பகுதியில் நடந்த அண்ணாவின் 115- ஆவது பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்த பொன்விழா மாநாட்டின் தீா்மான விளக்கப் பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட எம்.ஜி.ஆா் இளைஞரணி இணைச் செயலா் பிச்சைகனி தலைமை வகித்தாா்.
கம்பம் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.டி.கே ஜக்கையன் சிறப்புரையாற்றினாா். பொதுக் குழு உறுப்பினா் டி.டி.சிவக்குமாா், ஓடைபட்டி பேரூா் செயலாளா் மனோகா், மாவட்ட பிரதி மதிவாணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.