போடி அருகே மனைவியைப் பிரிந்து வாழந்த சோகத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகே நாகலாபுரம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் உடையாளி மகன் சுகுமாா் (35). விவசாயக் கூலித் தொழிலாளியானஇவரும், இவரது மனைவி யோகாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனா்.
பலமுறை சமாதானம் செய்ய முயற்சித்தும் யோகா தன்னுடன் வாழ வராததால் மனமுடைந்த சுகுமாா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.