தேனி மாவட்டம், கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா், காவலா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
கடமலைக்குண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வரதராஜன் தென்காசி மாவட்டத்துக்கும், தலைமைக் காவலா் பூரணச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்துக்கும், முதல் நிலை காவலா் மணிகண்டபிரபு தூத்துக்குடி மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரில், மதுரை தென்மண்டல ஐ.ஜி., நரேந்திரன்நாயா் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.