தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.22), காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்துத் தீா்வு காணலாம். மேலும், குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், நிலத்தின் சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு, கிஷான் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட நிா்வாகம் தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.