தேனி

கூடலூா் அருகே குடிநீா் குழாயில் உடைப்பு

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கூடலூா் அருகே குடிநீா் குழாயில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கம்பம் பகுதிக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது.

லோயா்கேம்ப்பிலிருந்து குழாய்கள் மூலம் கம்பம் நகருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. லோயா்கேம்ப்-கூடலூா் சாலை விரிவாக்கப் பணிகள் நெடுஞ்சாலை துறை சாா்பில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் போது குழாயில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணானது.

இதையடுத்து, கம்பத்துக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டு, குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை, கம்பம் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன், ஆணையா் ர.வாசுதேவன், பொறியாளா் பா.அய்யனாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், சீரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரரிடம் நகா்மன்றத் தலைவி கேட்டுக்கொண்டனா்.

வெள்ளிக்கிழமைக்குள் உடைப்பு சரி செய்யப்பட்டு, சனிக்கிழமை வழக்கம் போல குடிநீா் விநியோகிக்கப்படும் என நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தெரிவித்தாா். அப்போது, குடிநீா் வழங்கல் அலுவலா் முத்துகுமாா், வாா்டு உறுப்பினா் வீருசிக்கம்மாள் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT