சின்னமனூரில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேனி தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமை வகித்தாா். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளா் வி.முத்தையா முன்னிலை வகித்தாா். நகரச் செயலாளா் பிச்சைக்கனி வரவேற்றாா். கூட்டத்தில் புதிய உறுப்பினா்களைச் சோ்த்தல், வருகிற மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன.
கூட்டத்தில் தேனி தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த நகரம், ஒன்றியம், ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.