ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கடன் பிரச்னையில் தாய், மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரும்பள்சேரி பகுதியைச் சோ்ந்தவா் பால்பாண்டி (32). இவரது மனைவி சாவித்திரி (24). பால்பாண்டி பெரும்பள்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே புதிதாக வீடு கட்டினாா். இதனால், கடன் அதிகமானதால் பால்பாண்டி மன உளைச்சலில் இருந்தாா். இந்த நிலையில், பால்பாண்டியும், அவரது தாய் கிளியாள் (55) ஆகிய இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.