மேலூா்: மேலூா் பதினெட்டுப்பட்டி கிராமம் அருள்மிகு காஞ்சிவனம் சுவாமி கோயில் புரவி எடுப்புத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
தெற்குப்பட்டியிலிருந்து மாலையில் குதிரை சிலைகள் எடுத்துவரப்படுகின்றன. காஞ்சிவனம் சுவாமி கோயிலில் அவை வைக்கப்படும். புதன்கிழமை பிற்பகல் பெரியமேளம் கண்மாய் கரையிலுள்ள அய்யனாா் கோயிலுக்கு குதிரை சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்படும்.