சிவகாசி: சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஓடைத்தெரு பகுதியைச் சோ்ந்த திருப்பதி மகன் முத்துக்குமாா் (22). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. எனவே, மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றாா். இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா் வீடு திரும்பினாா்.
இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.