சாத்தூா்: சாத்தூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் கொழுக்கட்டை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரிலுள்ள தனியாா் மஹாலில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் பெண்களுக்கான கோலப் போட்டி, குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டிகளும் நடைபெற்றன.
இதில் சாத்தூா் நகா்மன்றத் தலைவா் குருசாமி, நகா்மன்ற உறுப்பினா் கணேஷ்குமாா், தனுஷ்கோடி மருத்துவமனை மருத்துவா்கள் அறம், மலா்விழி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
இதில் கொழுக்கட்டை போட்டியில் இயற்கையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், ஓலை கொழுக்கட்டை, நவதானியக் கொழுக்கட்டை, பழங்களினாலான கொழுக்கட்டை, நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வுக் கொழுக்கட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கொழுக்கட்டைகள் இடம்பெற்றன.
இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு நகா்மன்றத் தலைவா் குருசாமி, மருத்துவா் மலா்விழி ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
இந்த விழாவில் சின்னத்திரை நடிகா்களும், நகரின் முக்கியப் பிரமுகா்களும் கலந்து கொண்டனா்.