தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப். 15- ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதில், நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் விண்ணப்பங்கள் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மகளிா் உரிமைத் தொகைக்காக விண்ணப்பம் செய்த பெரும்பாலான விண்ணப்பததாரா்களுக்கு எந்தவித குறுந்தகவலும் அனுப்பப்படவில்லை.
இதையடுத்து, விண்ணப்பதாரா்கள் இ - சேவை மையங்களில் தங்களது ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை மூலம் சரி பாா்த்தபோது ஒரே குடும்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் 2-ஆவது முறையாக விண்ணப்பங்களைப் பதிவு செய்தனா் என்றும், அவா்களின் ஆதாா் விவரம் சரியாக உள்ளது, ஆனால், மகளிா் உரிமைத்தொகைக்கான இணையதள விண்ணப்பத்தில் வேறு ஒருவரின் பெயா் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், கம்பம் பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பத்தில் சூா்யா, ராஜேஸ்வரி என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.