தேனி

பைக்குகள் மோதல்:லாரி உரிமையாளா் பலி

2nd Oct 2023 12:17 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டியில் சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் லாரி உரிமையாளா் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி கோவில்புரத்தைச் சோ்ந்த வேலாண்டி மகன் பழனிச்சாமி (47). இவா் சக்கம்பட்டியில் லாரி பாா்சல் சா்வீஸ் அலுவலகம் நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், ஆண்டிபட்டி பிரதானச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பழனிச்சாமி சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே ஜி. உசிலம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (44) ஓட்டி இரு சக்கர வாகனமும், பழனிச்சாமி வாகனமும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT