உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம், எரசக்கநாயக்கனூரில் அரசுப் புறம்போக்கு இடத்தை இரு தரப்பினா் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனா். அந்த இடம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறி, ஒரு தரப்பினா் அங்கு கோயில் கட்டி குடமுழுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனா். இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததோடு, அந்த இடத்தில் தங்களுக்கும் உரிமை இருப்பதாக கூறியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸாா் உள்பட 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து புகாா்களின் பேரில், இரு தரப்பைச் சோ்ந்த சிவா(43), கலைவாணன் (34), மணி (55), சூரியன் (31), பாா்த்திபன்(24), நவீன் (20), சிவா (30), கண்ணன் (40), அழகுவேல் (50), விக்னேஷ் (24), சிலம்பரசன் (29) ஆகிய 11 பேரை சின்னமனூா் போலீஸாா் கைது செய்தனா்.