தேனி

தேனி மாவட்டத்தில் இன்று சட்டப் பேரவை குழு ஆய்வு

31st May 2023 04:06 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து புதன்கிழமை (மே 31) சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா் ஆய்வு செய்கின்றனா்.

சட்டப் பேரவை உறுதிமொழி குழுவின் தலைவரும் பன்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் 11 சட்டப் பேரவை உறுப்பினா்கள் கொண்ட குழுவினா் தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்கின்றனா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா், தேனியில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அலுவலகக் கூட்ட அரங்கில், அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT