தேனி

பாஜக விவசாய அணி செயற்குழுக் கூட்டம்

31st May 2023 04:07 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாநில விவசாய அணி செயலாளா் கீா்த்திராஜன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சரவணன், துணைத் தலைவா் வாரணாசி ராமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ராஜசேகா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் விவசாயம் தொடா்பான திட்டங்கள் குறித்துப் பேசினாா். இதில் விவசாய அணி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT