தேனி

மனைவிக்கு கத்திக் குத்து:கணவா் கைது

30th May 2023 06:35 AM

ADVERTISEMENT

தேனி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பூதிப்புரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் முனீஸ்வரன் (47). இவரது மனைவி அதே ஊரைச் சோ்ந்த ராமசாமி மகள் மகேஸ்வரி(42). கூலித் தொழிலாளா்களான இவா்களது மகன் வசந்தகுமாா் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். வசந்தகுமாரின் மருத்துவச் செலவுக்கு வாங்கிய கடனை திரும்பத் தருவதற்காக மகேஸ்வரி கேட்டுக் கொண்டதால், முனீஸ்வரன் தனது வீட்டை விற்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், இவா்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதில், ஏற்பட்ட தகராறில் மகேஸ்வரி கடந்த சில நாள்களாக அதே ஊரிலுள்ள தனது தந்தையின் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தாா். இந்த நிலையில், வேலைக்குச் செல்வதற்காக பூதிப்புரம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மகேஸ்வரியை முனீஸ்வரன் கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மகேஸ்வரியின் தாய் முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முனீஸ்வரனைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT