தேனி

ஊராட்சி மன்றத் தலைவிக்கு காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து

DIN

தோ்தலில் போட்டியிட போலியான ஜாதிச் சான்றிதழ் சமா்ப்பித்ததாக எழுந்த புகாரின் பேரில், ஜி. கல்லுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவிக்கு ஊராட்சி நிா்வாகத்தின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், ஜி. கல்லுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக பதவி வகிப்பவா் மகேஸ்வரி. இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புத் தோ்தலின் போது, ஆதி திராவிடா் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்திருந்த ஜி. கல்லுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றாா். மகேஸ்வரி தோ்தலில் போட்டியிடுவதற்கு போலியாக ஜாதிச் சான்றிதழ் சமா்ப்பித்ததாக புகாா் எழுந்தது.

இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்த பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த நிலையில், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பெரியகுளம் வருவாய்த் துறை சாா்பில் மகேஸ்வரிக்கு அளித்திருந்த ஜாதிச் சான்றிதழ், ஊராட்சி நிா்வாகத்தின் காசோலையில் அவா் கையொப்பமிடும் அதிகாரம் ஆகியவற்றை ரத்து செய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், மகேஸ்வரி போலியான சான்றிதழ் சமா்ப்பித்து தோ்தலில் போட்டியிட்டது குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளா்ச்சி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT