தேனி

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

30th May 2023 06:33 AM

ADVERTISEMENT

தேனியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா்.

மாநிலத் துணைத் தலைவா் பேயத்தேவன், மாவட்டச் செயலா் பவானி, அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் பொ.அழகுராஜா, சிஐடியு மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT