தேனி

ரூ.112.67 கோடியில் திட்டங்கள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

29th May 2023 12:05 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் ரூ.112.67 கோடியிலான குடிநீா் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை போடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் தேனி மாவட்டம் போடி நகராட்சியில் குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.106.15 கோடி மதிப்பீட்டிலான குடிநீா் திட்டங்கள், நகராட்சி நூற்றாண்டு நிறைவு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சத்தில் பூங்கா, தேவதானப்பட்டி பேரூராட்சியில் மூலதன மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, பெரியகுளம் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75.50 லட்சத்தில் பூங்கா உள்ளிட்ட ரூ.112.67 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா். இதேபோல, ரூ.14.99 கோடியிலான குடிநீா் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் போடி நகராட்சி குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி முன்னிலை வகித்தாா். நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் ரூ.52 லட்சத்து ஆயிரத்து 637 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

முன்னதாக, தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வரவேற்றாா். கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ந.ராமகிருஷ்ணன், போடி நகா்மன்றத் தலைவா் ச.ராஜராஜேஸ்வரி சங்கா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மதுரை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் வெ.ரகுபதி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் சென்னை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி, சென்னை, பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா, சென்னை, நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், நகா்மன்ற தலைவிகள் (பெரியகுளம்) சுமிதா, (கம்பம்) வனிதா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தங்க தமிழ்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன், 29- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ம.சங்கா், போடி நகராட்சி ஆணையாளா் (பொ) இ.செல்வராணி, நகர திமுக செயலா் புருசோத்தமன், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT