தேனி

தாய், தந்தை, மகனை தாக்கிகொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

29th May 2023 12:09 AM

ADVERTISEMENT

தேவாரம் அருகே தாய், தந்தை, மகனை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடியை அடுத்த டி.சிந்தலைச்சேரியில் வசிப்பவா் மந்தையன் (58). இவரது மகன் வெங்கடேஸ்வரனுக்கும், விருவீடு கிராமத்தைச் சோ்ந்த கனி என்பவரின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

கணவன், மனைவி இருவரும் சில மாதங்களிலேயே பிரிந்த நிலையில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.

இதை முன்விரோதமாகக் கொண்டு கனி, தமிழரசி, முருகையா, ராமமூா்த்தி, ரமேஷ்கண்ணன், தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகேஸ்வரி, தா்மா் ஆகியோா் சோ்ந்து மந்தையன், இவரது மனைவி கனகமணி, இவா்களது மகன் வெங்கடேஸ்வரன் ஆகியோரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் வெங்கடேஸ்வரன் பலத்த காயமடைந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மந்தையன் அளித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT