தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு மண்டல செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு நகரத் தலைவா் தெய்வம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாஸ்கா், பிரசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் சின்னதுரை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
மேலும், மாவட்டச் செயலா் தங்க.பொன்ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சுந்தா், பழனிவேல், பிரசாரப் பிரிவு மாவட்டச் செயலா் சிவராம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் நாகவேல் சுரேந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.