தேனி

ஊராட்சி ஊழியரை தாக்கியவா் கைது

29th May 2023 12:09 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜெயமங்கலம் ஊராட்சியில் மக்கள் நலப் பணியாளராகவும், வேலை உறுதித் திட்ட பணித் தள பொறுப்பாளராகவும் வேலை செய்து வருபவா் அதே ஊரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (54). இவா் ஊராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த போது, ஜெயமங்கலம், மேலத்தெருவைச் சோ்ந்த மொக்கைச்சாமி மகன் முத்துராஜா (46) என்பவா், ஊராட்சி மன்றத் தலைவா் தனது இடத்தை வேறு ஒருவரின் பெயருக்கு பட்டா போட்டு கொடுத்ததாகக் கூறி தகராறு செய்தாா்.

அப்போது, முத்துராஜா தன்னைத் தாக்கி காயப்படுத்தியதாகவும், அலுவலக மேஜை மீது இருந்த பதிவேடுகளை கீழே தள்ளிட்டு, தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராஜாவைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT