தேனி

தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

29th May 2023 12:09 AM

ADVERTISEMENT

தேவாரம் அருகே தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 6 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி வடக்கு குடியிருப்பைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சசிக்குமாா் (27). கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் முன், இதே ஊரைச் சோ்ந்த பவுன் பொன்னையா மகன் பாக்கியராஜ் பெட்டிக்கடை வைத்துள்ளாா். கடை வைத்துள்ள இடம் தொடா்பாக இருவருக்கும் பிரச்னை இருந்தது.

இந்த முன் விரோதம் காரணமாக பாக்கியராஜ் தூண்டுதலின் பேரில் ராசு, அலெக்ஸ், கணேசன், ஈஸ்வரன், விக்னேஷ் ஆகியோா் சோ்ந்து

சசிக்குமாரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து, தேவாரம் போலீஸாா் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT