தேனி

உத்தமபாளையத்துக்கு நிரந்தர சாா்-பதிவாளரை நியமிக்கக் கோரிக்கை

29th May 2023 12:08 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோா் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மூத்த உறுப்பினா் சம்பத் தலைமை வகித்தாா். இதில், உத்தமபாளையம் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு நிரந்தரமான பத்திரப்பதிவு அலுவலரை நியமிக்க வேண்டும். பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் தேவையில்லா ஆவணங்களைக் கேட்டு அலைக்கழிப்பு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோா் சங்கத்தினா் பலரும் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT