தேனி

உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீா்ப் பற்றாக்குறை

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீா்ப் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இந்தப் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா்.

பேரூராட்சியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் சுமாா் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிநீா் இணைப்புகள் உள்ளன. இதற்காக இணைப்பு ஒன்றுக்கு மாதம் ரூ.100 வசூல் செய்யப்படுகிறது.

சமீப காலமாக வாரத்துக்கு ஒரு முறை என மாதத்திற்கு 4 முறையே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பேரூராட்சி பணியாளா் ஒருவா் கூறுகையில், லோயா் கேம்ப் கூட்டுக் குடிநீா்த் திட்டத்திலிருந்து தண்ணீா் வருவதில்லை. தற்போது, முல்லைப் பெரியாறு ஆற்றில் உறைகிணறு அமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப குடிநீா்த் திட்டத்தில் மாற்றம் இல்லாததால் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படுவதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

SCROLL FOR NEXT