தேனி

வா்த்தக சங்க முப்பெரும் விழா

27th May 2023 11:35 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், சின்னமனூரில் வா்த்தக சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆண்டு விழா, குடும்ப விழா, விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்தக விழாவுக்கு கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் காவல் துறை , தீயணைப்புத் துறை, செவிலியா், ஆசிரியா், பத்திரிகை துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சின்னமனூா் நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள்ராமு, துணைத் தலைவா் முத்துக்குமாா், சின்னமனூா் வா்த்தக சங்க உறுப்பினா்கள், குடும்பத்தினா் என பலரும் கலந்து கொண்டனா். சின்னமனூா் நகா் தலைவா் உதயக்குமாா் வரவேற்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, காந்தி சிலை பேருந்து நிறுத்தம் முதல் பூலாநந்தீஸ்வரா் கோயில் வரையில் ஊா்வலமாகச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT