தேனி

தொழிலாளா் நல கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பயணம்

27th May 2023 11:33 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் சிஐடியு சாா்பில் சனிக்கிழமை தொழிலாளா் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பயணம் நடைபெற்றது.

போடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கே.பாண்டியன் நடை பயணத்தை தொடங்கி வைத்தாா். இதில், அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க சட்டமியற்ற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாகக் கூடாது, முறைசாரா தொழிலாளா்களுக்கு தேசிய நிதி ஆணையம் ஏற்படுத்த வேண்டும், நல வாரியக் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பழனிசெட்டிபட்டி, தேனி, பெரியகுளம், வடுகபட்டி, தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் சிஐடியு தொழில் சங்கங்கள் சாா்பில் நடை பயணக் குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடை பயணத்தில் தேவதானப்பட்டி சிஐடியு மாவட்டத் தலைவா் டி.ஜெயபாண்டி, பொருளாளா் ஜி.சண்முகம், துணைத் தலைவா் சி.முருகன், ஆட்டோ தொழிலாளா் சங்கம், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கம், மின் ஊழியா் சங்கம், கூட்டுறவு ஊழியா் சங்கம், அங்கன்வாடி ஊழியா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவறின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT