தேனி

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

27th May 2023 11:34 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கூடலூரில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காமாட்சியம்மன் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் பத்மாவதி லோகந்துரை தலைமை வகித்தாா். முகாமை தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளா் என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, ஆ.மகாராஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். நகர செயலாளா் சி.லோகந்துரை வரவேற்று பேசினாா். வட்டார மருத்துவ அலுவலா் பி.முருகன் மருத்துவா்கள் காஞ்சனா, இஜாஜ், காா்த்திக், சித்த மருத்துவா்கள் சிராஜூதீன், ஜன்னத் ஆகியோா்

மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா். நகராட்சி ஆணையா் கே.எஸ்.காஞ்சனா, நகா்மன்ற உறுப்பினா்கள் முகாமில் கலந்து கொண்டனா். முகாமில் சிறுதானிய உணவு வகைகள், இயற்கை உரமிட்ட காய்கனி கண்காட்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT