தேனி

சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து மாணவி பலி:நிவாரணம் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

24th May 2023 05:49 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், சுருளி அருவியில் மே 14 - இல் சென்னை நீலாங்கரையைச் சோ்ந்த நிக்சனின் 15 வயது மகள் பெமினா. நிக்சன் தனது குடும்பத்தினருடன் அருவியில் குளித்து விட்டுத் திரும்பிய போது, உயரமான நாவல் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பெமினா உயிரிழந்தாா். இந்த குடும்பத்தினருக்கு வனத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் நிவாரணத் தொகை வழங்கவில்லை.

இதைக் கண்டித்து, கம்பம் நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வ உ.சி. திடலில்

செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரக் குழு உறுப்பினா் அய்யப்பன் தலைமை வகித்தாா். செயலா் கே.ஆா்.லெனின் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

சுருளி அருவியில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும், தமிழக அரசு பெமினாவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட குழு உறுப்பினா்கள் வி.மோகன், எஸ். பன்னீா்வேலு உள்ளிட்ட கட்சியினா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT