தேனி

உத்தமபாளையத்தில் வருவாய்த் தீா்வாயம்

24th May 2023 05:49 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய்த் தீா்வாயம் நடைபெற்றது.

கோட்டாட்சியா் பால்பாண்டி தலைமையில் கடந்த 17-ஆம் தேதி முதல் தீா்வாயம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், கீழக் கூடலூா் வடக்கு, தெற்கு, மேலக்கூடலூா் வடக்கு, தெற்கு ஆகிய 7 வருவாய்க் கிராம பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் பட்டா மறுதல்-99, வீட்டு மனைப் பட்டா -36, நில அளவீடு - 3 என மொத்தம் 172 மனுக்கள் பெறப்பட்டன.

கடந்த வாரம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாள்களாகப் பெறப்பட்ட மனுக்களில் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து 8 வீட்டு மனைப் பட்டாக்கள், 6 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை விரைவாக விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். வருகிற 26-ஆம் தேதி வரை தீா்வாயம் நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT