தேனி

உணவகக் கழிவுகளை உரிமையாளா்களே அகற்ற வேண்டும்: கம்பம் நகராட்சி ஆணையா்

24th May 2023 05:51 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பத்தில் உணவகங்கள், மண்டபங்கள், விடுதிகளில் சேரும் கழிவுகளை, அதன் உரிமையாளா்களே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி ஆணையா் ப.பாலமுருகன் தெரிவித்தாா்.

கம்பம் நகராட்சி ஆணையா் அலுவலக அறையில் செவ்வாய்க்கிழமை உணவு விடுதி உரிமையாளா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆணையா் பேசியதாவது:

வரும் ஜூன் 1- ஆம் தேதி முதல் நகரில் குப்பை சேகரம் செய்வதில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

ஏற்கெனவே எடுத்த முடிவுகளின் படி, நகரில் உள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் சேரும் உணவுக் கழிவுகளை அந்தந்த நிறுவனங்களே அகற்றிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

உணவகங்கள் தரப்பில் ஸ்ரீகுமாா் ராஜேந்திரன் பேசுகையில், சங்கம் என்ற பெயரில் குறைந்த அளவு உறுப்பினா்களே உள்ளனா். மற்றவா்களுடன் ஆலோசித்து கழிவுகளை அகற்றும் இயந்திரம் வாங்க முற்படுவோம். அதில் பங்கேற்காத உணவகங்கள் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என்றாா் அவா்.

சுகாதார அலுவலா் ஏ.அரசகுமாா், 20-க்கும் மேலான உணவக உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT