தேனி

தேனி மாவட்டம் வழியாக கேரளத்துக்குகனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்க வலியுறுத்தல்

23rd May 2023 04:26 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் கனிம வளங்கள் கேரளத்துக்கு அனுமதிச் சீட்டு இல்லாமல் கொண்டு செல்லப்படுவதாக புகாா் எழுந்ததையடுத்து தமிழக அரசு சிறப்பு கண்காணிப்புக் குழுவை கடந்த 4- ஆம் தேதி அமைத்தது.

இந்தக் குழுவில் கனிம வளத்துறை துணை இயக்குநா் தலைமையில், 2 உதவி புவியியலாளா்கள் நியமிக்கப்பட்டு, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கேரள மாநிலத்துக்குச் செல்லும் கனிம வளங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், குமுளி உள்ளிட்ட கேரள மாநிலத்துக்குச் செல்லும் 3 எல்லைப் பகுதி மலைச் சாலைகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிக்க குழு அமைக்கப்படாததால் கேரளத்துக்கு அவை தடையின்றி கடத்தப்படுவதாகவும், எனவே தேனி மாவட்ட ஆட்சியா் சிறப்புக் குழுவை நியமித்து இதைத் தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT