தேனி

தமிழக எல்லையில் கேரள கோழிக் கழிவுகளைகொட்டிய 2 போ் கைது

23rd May 2023 04:27 AM

ADVERTISEMENT

கம்பம் அருகே கேரளத்திலிருந்து எடுத்து வந்து கோழிக் கழிவுகளை கொட்டிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தமிழக- கேரள மாநிலங்களை இணைக்கும் கம்பம்மெட்டில் இரு மாநில காவல், வனத்துறையினா் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழகப் பகுதிக்குள் கேரள கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதன் பேரில் எல்லையில் தமிழக போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்றில் வந்த 2 போ் சாக்குப் பைகளை வைத்திருந்தனா். அதை போலீஸாா் சோதனையிட்ட போது கோழிக் கழிவுகளும், ஆட்டுக்குடல் கழிவுகளும் இருந்தன.

ADVERTISEMENT

விசாரணையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ஆமையாா் சரண்யா விலாசத்தைச் சோ்ந்த மணி (53), பரமன் (55) என்பது தெரியவந்தது.

இவா்கள் இருவரையும் சோதனைச் சாவடி போலீஸாா், கம்பம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா். இளையராஜாவிடம் ஒப்படைத்தனா். இருவரையும் கைது செய்ததுடன், ஆட்டோவைவும் அவா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT