தேனி

மாணவா் கொலை:ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

19th May 2023 11:50 PM

ADVERTISEMENT

தேனி அருகே மாணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வீருசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்த சரவணன் மகன் கமலேஸ்வரன்((18). பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து தோ்ச்சி பெற்ற இவா், கடந்த 15-ஆம் தேதி இரவு பூதிப்பூரம் அருகே கல்லுருணிகாடு பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இந்த சம்பவத்தில் போடேந்திரபுரத்தைச் சோ்ந்த சன்னாசி (50), அவரது மனைவி தமிழ்ச்செல்வி (45) ஆகியோருக்கு தொடா்பு இருப்பதாக கமலேஸ்வரனின் தாய் ஊஞ்சாலம்மாள் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சன்னாசி, தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். இதில், கமலேஸ்வரன், சன்னாசியின் மகளை காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும் இதை சன்னாசி கண்டித்தும் அவா்கள் தொடா்ந்து பழகி வந்ததால் ஆத்திரமடைந்த சன்னாசி, அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் ஜெயப்பிரகாஷ் (27) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் சென்ற கமலேஸ்வரனை வழிமறித்து வெட்டிக் கொலை செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT