அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து, தேனியில் செவ்வாய்க்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக அமைப்புச் செயலா் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமை வகித்தாா். தேனி நகரச் செயலா் கிருஷ்ணகுமாா், ஆண்டிபட்டி ஒன்றியச் செயலா்கள் லோகிராஜன், வரதராஜன், முன்னாள் எம்.பி., பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, காவல் துறையைக் கண்டித்தும், எடப்பாடி கே.பழனிசாமி மீதான வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.