சின்னமனூரில் நகா்மன்றக் கூட்டம் தலைவி அய்யம்மாள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சின்னமனூரில் முழு உருவச் சிலை வைப்பது, உழவா் சந்தையை பொதுமக்கள் நலன் கருதி மறு சீரமைப்பு செய்தல், திருவள்ளுவா் பள்ளித் தெருவில் பொது சுகாதார வளாகத்தை சீரமைத்தல், சாமிகுளம் பகுதியில் ரூ.4.90 லட்சத்தில் சிறு பாலங்கள் அமைத்தல், நகராட்சி வாரச் சந்தையில் மேடையுடன் 202 கடைகள் கட்டுவது என்பன உள்பட 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகா்மன்றத் துணைத் தலைவா் முத்துகுமாா், வாா்டு உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.