தேனி மாவட்டத்தில் நடைபெற்ற திட்டக்குழு உறுப்பினா் தோ்தலில் வெற்றி பெற்ற கூடலூா் நகா்மன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் திட்டக்குழு உறுப்பினா்கள் தோ்தல், கடந்த வாரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் திமுக, அதிமுகவைச் சோ்ந்த 7 போ் வெற்றி பெற்றனா்.
இதில் கூடலூா் நகா்மன்ற உறுப்பினா் தினகரன் 341 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதில் போட்டியிட்ட 7 பேரில் தினகரன் அதிக வாக்குகள் பெற்றாா்.
இவருக்கு கூடலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா்மன்றத் தலைவி பத்மாவதி லோகந்துரை தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஆணையாளா் கே.எஸ்.காஞ்சனா, நகர திமுக செயலாளா் லோகந்துரை, துணைத் தலைவா் காஞ்சனா சிவமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் விவேக் அறிவழகன், மேலாளா் ஜெயந்தி, உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.