தேனி

சமுதாயக் கூடத்தில் அலங்கார விளக்குகள் சேதம்: இளைஞா் கைது

30th Jun 2023 10:52 PM

ADVERTISEMENT

போடி சமுதாயக் கூடத்தில் அலங்கார விளக்குகளை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி புதூரில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான சமுதாயக் கூடம் உள்ளது. இந்த சமுதாயக் கூடத்துக்குள் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த சுருளி மகன் சதீஸ் (19), அங்கிருந்த அலங்கார விளக்குகள், குழல் விளக்குகளை சேதப்படுத்தினாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஸை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT