தேனி

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

28th Jun 2023 02:01 AM

ADVERTISEMENT

போடியில் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி கரட்டுப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஜங்கால் மகன் பவுன்பாண்டி (41). கூலித் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை மாலை போடி புதூரிலுள்ள மாங்காய் கடையில் வேலை செய்து கொண்டுருந்த போது, அருகிலுள்ள கடைக்குச் சென்றாா்.

அப்போது, அங்கு நின்றிருந்த போடி ரயில் நிலையம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த மலைராஜன் மகன் செல்வக்குமாா் (24), அதே பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் ராஜ்குமாா் (31) ஆகியோா் முன்விரோதம் காரணமாக, பவுன்பாண்டியை அவதூறாக பேசி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதையடுத்து, பவுன்பாண்டி போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT