தேனி

குளத்தை ஆக்கிரமித்துக் கட்டிய வீடுகள் இடிப்பு

10th Jun 2023 10:35 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 16 வீடுகளை பொதுப் பணித் துறையினா் சனிக்கிழமை இடித்து அகற்றினா்.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி, எரக்கோட்டைப்பட்டியில் குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதால், அவற்றை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குளத்தை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

அதன்படி, சனிக்கிழமை பொதுப் பணித்துறையினா் ஜே.சி.பி இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனா்.

ADVERTISEMENT

சாலை மறியல்: இதற்கு வீடுகளைக் கட்டியவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, சம்பவயிடத்துக்கு வந்த உத்தமபாளையம் வட்டாட்சியா் சந்திரசேகா், நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்புஅகற்றப்பட இருப்பதாக தெரிவித்தனா்.

ஆனாலும், ஆக்கிரமிப்பாளா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஓடைப்பட்டி காவல் ஆய்வாளா் சிலைமணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 16 வீடுகளை இடித்து அகற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT