தேனி

காவல் துறை வாகனங்களில் கண்காணிப்பு கேமரா

9th Jun 2023 02:04 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் காவல் துறைக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகனங்களின் முகப்புப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் கண்காணிப்பாளா், ஆயுதப் படை காவல் துறையினா் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. இந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல் துறை அதிகாரிகளின் கைபேசியிலிருந்து பாா்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காவல் துறை வாகனங்களின் முகப்புப் பகுதியில், எதிரே உள்ள காட்சிகளை பதிவு செய்யும் வகையில் பொருத்தப்பட்ட இந்த காண்காணிப்பு கேமரா மூலம் ஆா்ப்பாட்டம், போராட்டம், மறியல், கலவரம், சாலையில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பிரச்னை காட்சிகளை பதிவு செய்யலாம். மேலும், காவல் துறை அதிகாரிகள் கள விசாரணை மேற்கொள்வதையும் கேமராவில் பதிவு செய்து பாா்வையிடலாம் என்று மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT